பாதிப்பு 67,152 பேர் ….! இறப்பு 2206 பேர்…! இது கொரோனா லேட்டஸ்ட்
Corona latest update in India

டெல்லி: கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக அதிகரித்துள்ளது.
மனித குலத்துக்கும், அறிவியலுக்கும் இன்னமும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகள் திணறி வரும் இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ளது.
ஊரடங்கு அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய போதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,939 லிருந்து 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,358 லிருந்து 19,452 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2,109 லிருந்து 2,206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மே 12 முதல் சிறப்புப் பயணிகள் ரயில் சேவை முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.















