மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பரிசீலனையில் சர்ச்சை..?
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தாண்டு 386 ஆசிரியருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரம் அந்தந்த சி.இ.ஓ.,க்களுக்கு செப்.,2ல் தபாலில் அனுப்பப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர், போலீஸ் நற்சான்று பெற்று வந்த பின், அவர்கள் பெயர் விபரம் வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.நாளை சென்னையில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில் விருது பெற்றோர் பங்கேற்க வேண்டிய சூழலில், பல மாவட்டங்களில் கடைசி நேரம் வரை விருது கிடைத்த விபரத்தை ஆசிரியர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கவில்லை. தென் மாவட்ட ஆசிரியர்கள் அவசர கதியில் சென்னை நிகழ்ச்சிக்கு தயாராக வேண்டியிருந்தது.தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர்ஆரோக்கியதாஸ் கூறியதாவது: விருதுக்குவிண்ணப்பம் செய்வதை எளிமைப்படுத்த வேண்டும். விருது அறிவிப்பில் வெளிப்படை தன்மை வேண்டும். பலமாவட்டங்களில்விருதுபெற்றவர்பெயர்விபரம்அறிவிக்கப்பட்டு,24மணிநேரத்திற்கும்மேல்தகவல்தெரிவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.ஒரு வாரம் முன்பே விருது விபரம் அறிவிக்க வேண்டும். விருது ஆசிரியர்களுக்கு தமிழக அரசே போலீஸ் நற்சான்று தர வேண்டும். ஸ்டேஷன்களுக்கு அலையவிடக் கூடாது. ஆன்லைனில் விண்ணப்ப ஆவணங்கள் 100க்கும் மேற்பட்ட பக்கம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்ததால் டி.இ.ஓ., சி.இ.ஓ., பரிசீலனையில் 25 சதவீதம் விண்ணப்பங்கள் ‘நாட் கம்ப்ளீட்’ என இருந்ததாகவும், அவை பரிசீலிக்கப்படவே இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது. கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்…