போடியில் தொல்.திருமாவளவன் பிறந்தநாள்–சிறப்பு செய்தி
*எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு போடியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் முதியோர் பெண்களுக்குச் சேலைகள் வழங்கப்பட்டன*தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போடி ஒன்றியச் செயலாளர் மோகன் தலைமையில், எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், முதியோர் பெண்களுக்குச் சேலைகளும் வழங்கப்பட்டன.விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் நோட்டுப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்; தொடர்ந்து பெண்களும் சேலைகளைப் பெற்றுச் சென்றனர்.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகப் போடிநாயக்கனூர் சட்டமன்ற மாவட்டச் செயலாளர் மதன் கலந்துகொண்டு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சேலைகளை வழங்கினார்.மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகச் சிறுபான்மையினர் அணி போடி நகரப் பொறுப்பாளர் பிரபு மற்றும் 26-வது வார்டு பொறுப்பாளர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.மாவட்டப் பொருளாளர் அர்ச்சுனன் இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தார்.தொடர்ந்து, மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அக்பர் அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் அமுதா ஜெயராஜ் மற்றும் பிரசாத், இ.எ.பாசறை மாவட்டச் செயலாளர் நாகராஜ், நகரத் துணைச் செயலாளர் ரத்தினம், வீரபாண்டி பேரூர் செயலாளர் பிரபு, கோட்டூர் ஜான் சின்னப்பன், அருண்பாண்டியன், சேகர், டைமன்ராஜ், ரெட்ஸாகர், குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .இறுதியாக போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் கருத்தப்பாண்டி நன்றியுரையாற்றினார்….