fbpx
Others

செங்குன்றம் — வங்கி,ஏடிஎம், செக்யூரிட்டிகளுடன் காவல்துறை ஆலோசனைக்கூட்டம்…

ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் டி.செந்தில்குமார் ஆணைக்கிணங்க துணை ஆணையர் மருத்துவர் ஆர். சிவக்குமார் உத்தரவின்பேரில் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். மகேஸ்வரி அறிவுறுத்தலின் பேரில் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட வங்கி, ஏடிஎம், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் செக்யூரிட்டிகளுடன் காவல்துறை ஆலோசனைக் கூட்டம் செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் பிராங்க் டி ரூபன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றும் பொழுது,ஏடிஎம்,வங்கிகள், தனியார் நிறுவனங்களில் காவலர்களாக பணியாற்றும் பொழுது, இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள், திருடர்கள், சமூகவிரோதிகள் என்று தெரிய வந்தாலோ அல்லது குற்றங்கள் ஏதாவது நடைபெறுகிறது. என்று தெரிந்தாலோ அவர்கள் குறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினர்.செங்குன்றம் காவல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.சோழவரம் காவல் ஆய்வாளர். கிளாஸ்டின் டேவிட், மீஞ்சூர் குற்றவியல் ஆய்வாளர் ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட செங்குன்றம், சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதி செக்யூரிட்டிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.இதில் உதவி ஆய்வாளர்கள்,மற்றும்காவலர்கள்கலந்துகொண்டனர்.செங்குன்றம் குற்றவியல் ஆய்வாளர். பரிபூரணம் நன்றி கூறினார்.

 

Related Articles

Back to top button
Close
Close