RETamil Newsஇந்தியாஉலகம்
விசா ரத்து ! ஆஸ்திரேலியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்
ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு வீசா ரத்து செய்யப்பட்டதால் தவித்து வருகின்றனர் .இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர்.
இதில் 22 பேர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.இவர்கள் கோவை மாவட்ட தனியார் ஏஜென்சி மூலம் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை கொடுத்துள்ளனர் ஆனால் தனியார் நிறுவனங்கள் போலியாக சான்றிதழ் சமர்ப்பித்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அளித்த ஆவணங்கள் போலியானவை என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.இதனால் அவர்கள் உடனடியாக திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.