fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

ரூபாய் 34க்கு பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு! காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்!

ந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவரும் பா.ஜ.க. மோடி அரசு, குறைந்த விலைக்கு பெட்ரோல் டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில் விவரம் வருமாறு:

மத்தியில் ஆளும் மோடி அரசின் மிகக்கொடூரமான வரிவிதிப்பின் விளைவால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.

இந்த வரிவிதிப்பால் மோடி அரசு ஏற்கனவே ரூ.11 லட்சம் கோடி லாபம் அடைந்துவிட்டது.

இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டதால், சாமானிய மக்கள், நடுத்தர மக்கள், விவசாயிகள், சிறு, குறுதொழில் செய்பவர்கள், போக்குவரத்து தொழில் செய்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த வேதனையைத் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, சாமானிய மக்களின் பட்ஜெட்டில் மிகப்பெரிய ஓட்டை உருவாகிவிட்டது .

மோடி அரசை இந்த நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள், எரிபொருளில் கொள்ளையடிக்கும் மோடி அரசையும் மறக்கவும் மாட்டார்கள். இதற்கு அடுத்து வரும் தேர்தலில் பாஜக அரசுக்குத் தகுந்த பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்.

மக்களின் வேதனைகளையும், மக்கள் படும் துன்பங்களையும் மத்திய அரசுபுரிந்து கொள்ள விரும்பவில்லை புரிந்து கொள்ள போவது மில்லை.

டீசல்விலை லிட்டருக்கு ரூ.70.26 காசுகள் உயர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது, இதனால், உணவுப்பணவீக்கத்துக்கு கொண்டு செல்கிறது. டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.78.57 காசுகளாக உயர்ந்துவிட்டதால், சாமானிய, நடுத்தர மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

கடந்த 2014-ம் வருடம் பாஜக ஆட்சிக்கு வந்தபின், பெட்ரோல் மீது உற்பத்தி வரி 211.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் மீது 433.06 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 முறை உற்பத்தி வரி ஏற்பட்டுள்ளது.

நம்முடைய நாட்டில் இருந்து பெட்ரோல், டீசல் 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நம்நாட்டில் சராசரியாக பெட்ரோல் டீசல் விலை ரூ.78, ரு.86 ஆக இருக்கிறது. ஆனால், மோடி அரசு 15 வெளிநாடுகளுக்கு பெட்ரோலை லிட்டர் ரூ.34க்கும், டீசலை ரூ.29-க்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. இது ஆர்டிஐ மூலம் தெரியவந்திருக்கிறது.

குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா,மலேசியா, இஸ்ரேல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

ஆக சொந்த நாட்டு மக்களுக்கு மோடி அரசு துரோகம் இழைக்கிறது,

முதுகில் குத்துகிறது.

ஜிஎஸ்டிவரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வாருங்கள் என்று கூறியும் அதைக் காதில் வாங்க மோடி அரசு மறுக்கிறது” இவ்வாறு  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close