fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

டிஜிட்டல் மயம்…! சென்னை பேருந்துகளில் கலக்கும் போக்குவரத்து கழகம்!

Digital payment trail started in Chennai buses

சென்னை:

சென்னையில் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சைதாப்பேட்டை, தி. நகர் பணிமனைகளில் இருந்து தலைமை செயலக ஊழியர்களுக்கு 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், 2 பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனையில் பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தும் நடைமுறை சோதனை முயற்சியாக அமலுக்கு வந்து இருக்கிறது.

க்யூஆர் கோடு கொண்டு பேடிஎம், கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற ஆப்களில் டிக்கெட் பணத்தை செலுத்தலாம். கட்டணம் மாநகர போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்லும்.

இது எந்தளவுக்கு வரவேற்பு பெறும் என்பது தெரியவில்லை. அதன் அடிப்படையில் இது மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படுமா என்று  அறிவிக்கப்படும்.

Tags

Related Articles

Back to top button
Close
Close