fbpx
RETamil Newsஉலகம்

மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது!

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த இரு வாரத்திற்க்கு முன்பு தான் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதனால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர்.

இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மைய தரப்பில் கூறியுள்ளதாவது; ‘ இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் ஞாயிற்று கிழமை அன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை , சில இடங்களில் மட்டும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் விரிசல்களும் , சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்திகள் கூறப்படுகின்றது.

மேலும் முழுமையான பாதிப்புகள் பற்றி விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்புதான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது அதனால் பெரும் சேதமும் , உயிர் சேதமும் ஏற்பட்டதை அடுத்து , இப்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close