
இன்று பிஜி தீயில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.19-க்கு ஆனதாக கூறப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடலின் அதிஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமிக்கு வாய்ப்பில்லை என்று யு.எஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 8-ஆக பதிவானது பின்னர் 8.2-ஆக அதிகரித்தது. இந்த நிலநடுக்கம் அதிஆழத்தில் ஏற்படவில்லையெனில் அதிக சேதத்தை அந்த இடத்தில் ஏற்படுத்தி இருக்கும்.
இந்தோனேஷியாவில் கடந்த சில வாரங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டிருக்கு அப்படியிருக்கும்போது தற்போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தோனேஷியாவில் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.