பாக்கிஸ்தான் நாடாளு மன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றதை தொடர்ந்து , அந்நாட்டின் பிரதமராக இன்று பதவி ஏற்றார்.
பாக்கிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது . இதில் 116 இடங்களை கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது.
நவாஸ் ஷெரீப் கட்சியின் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 96 இடங்களை கைப்பற்றியது.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களை கைப்பற்றியது.
இதை தொடர்ந்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் தேவை . இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து 176 பேரின் ஆதரவு கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் தகுதியை அந்த கட்சி பெற்றது.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கு நவாஸ் ஷெரீப் கட்சியின் சார்பில் ஷான்பாஸ் ஷெரீப் போட்டியிட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த கட்சிக்கு 96 இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நிச்சயம் தோற்பார்கள் என்று தெரிந்திருந்தும் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
இதையடுத்து , வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 176 உறுப்பினர்களின் ஆதரவுடன் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து இன்று சனிக்கிழமை பாக்கிஸ்தான் அதிபர் மம்மு ஹுசைன் -ன் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவி
ஏற்றார்.