fbpx
Others

கரூர் திமுக முப்பெரும் விழாவில் வாந்தி, பேதி…?

கரூர் திமுக முப்பெரும் விழாவில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி !

கரூர், செப்., 22 :

கரூர் மாவட்டம், கொடங்கிப்பட்டியில் கடந்த 17-09-2025 அன்று திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதே போல வடவள்ளி பகுதி கழகத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் இரவு உணவாக நிர்வாகிகளுக்கு கொடுத்த உணவை சாப்பிட்ட சுமார் 35 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு உடம்பு வலி காய்ச்சல், பேதி ஏற்பட்டிருக்கிறது, இதையடுத்து அவர்களில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த உணவு ஏற்பாடு செய்ததற்கு பெருந்தொகை கமிஷனாக பெறப்பட்டு தரமற்ற உணவுகளை கொடுத்த உணவு பொறுப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக கோவை மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் விஷ உணவு அளித்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது திமுக மீது அவபெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. திமுக நிர்வாகிகளுக்கே இது போன்ற நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு தரமற்ற உணவை வழங்கிய நபர் யார் என்று அறிந்து வரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பரா திமுக தலைவர் ?

Related Articles

Back to top button
Close
Close