fbpx
RETrending Nowஇந்தியா

நீட் தேர்வு தேதியை அறிவித்தது மத்திய அரசு..! எப்போது என்று பாருங்க…!

NEET Exam date announced

டெல்லி: மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, கொரோனா தொற்று  இல்லாமல் இருந்திருந்தால் மே 3ம் தேதி நடைபெற்று இருக்கும். ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வுக்கான பணிகள் தொடங்கவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான புதிய தேதிகள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன் படி இன்று அதிகாரப்பூர்வ தேதி வெளியாகி இருக்கிறது.

ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு, ஜேஇஇ முதன்மை தேர்வு ஜூலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close