RETamil Newsஉலகம்
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!!
இந்தோனேசியாவில் கடந்த மாதம் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அந்த சம்பவத்தால் ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டைலிங் நடால் மாவட்டத்தில் இஸ்லாமிய பள்ளி செயல்பட்டு வருகின்றது .
இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து நேற்று கன மழை பெய்து வந்ததால் அந்த பள்ளி கட்டிடம் நிலச்சரிவால் திடீரென இடிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.