இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கு-ஜனாதிபதியால் வழங்கப்பட்டது ‘கேல்ரத்னா’ விருது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜிவ் காந்தி கேல்ரத்னா , அர்ஜுனா ஆகிய விருதுகளை வீரர்களுக்கு வழங்கி கவுரவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான விருதுக்கு தகுதியானவர்களை முன்னாள் நீதிபதிகள் இந்தர்மித் கவுர் கோச்சார் , முகுல் முட்கள் ஆகியோர் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்தது.
இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக பெரிய விருதான கேல் ரத்னா விருதை கிரிக்கெடில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்திய அணியின் கேப்டனும் ‘நம்பர் ஒன்’ டெஸ்ட் பேட்ஸ்மேனுமான வீராட்கோலி, உலக பளு தூக்குதல் சாம்பியன் மணிப்பூரை சேர்ந்த 24 வயதான மீராபாய் சானு ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் வீராட்கோலிக்கும் பளு தூக்குதல் சாம்பியன் மீராபாய் சானுக்கும் கவுரவமிக்க ‘கேல்ரத்னா’ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.