fbpx
Others

தேனி-சின்னமனூர்-ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம்.

தமிழ்நாடு – தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூரில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் கேட்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம்!!! தேனி மாவட்டம் – சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில், 07/10/24 இன்று காலையில், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு விவசாய தொழில் உபகரணங்களான மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள், கொத்து, பன்னரிவாள், கூடை போன்றவைகளை அரசு வழங்கவேண்டும் அல்லது வாங்குவதற்கு நிதியுதவி தரவேண்டும் என்றும் , மேலும் விவசாய கூலி தொழிலாளர்களின் குடும்பத்தில் படித்தவர்களுக்கு மத்திய மாநில அரசு பணி வழங்கிட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி தலைமையில், கிளை தொழிலாளர் அணி ஒருங்கிணைப்பாளர் சங்கர், செயலாளர் கண்ணன் மற்றும் ஆம் ஆத்மி விவசாய கூலி தொழிலாளர்கள் தோளில் மண்வெட்டியை ஏந்தி, மத்தியமாநிலஅரசுகளைவலியுறுத்திக்கேட்டுக்கொண்டநிகழ்வு…..
ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close