fbpx
Others

செங்குன்றம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் கு.கிருஷ்ணமூர்த்திபொறுப்பேற்பு.

செங்குன்றம், பிப்ரவரி 05:  ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட செங்குன்றம் காவல் நிலையத்திற்கு சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளராக கு.கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் பொன்னேரி காவல் நிலையத்தில் காவல்ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி, ஆவடி ஆணையரக காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்சின்ஹாஉத்தரவின்பேரில் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருடைய சீரிய பணியினை பாராட்டி தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான அண்ணா காவல் பதக்கம் 2023 ஆண்டிற்காக பெற்றுள்ளார்.  இவர் ஆவடி காவல் ஆணையர் சங்கரிடம் சிறந்த காவல் ஆய்வாளருக்கானபாராட்டுச்சான்றிதழையும்பெற்றுள்ளார்.இந்திய அளவில் உயரிய விருதாக கருதப்படும் ஜனாதிபதி விருதிற்காக இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கதுபுதியகாவல்ஆய்வாளராகபொறுப்பேற்றுக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி, செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கை பேணுவதில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும், பொதுமக்கள் அச்சமின்றிவாழும்வகையில்காவல்கண்காணிப்புதீவிரப்படுத்தப்படும் என்றும், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close