வீழும் பொருளாதாரம் , அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் – ஒரு பார்வை

இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அனைவருக்கு வேலையில்லா சூழ்நிலையும் , அதனால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலையிலும் உள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நம் அரசாங்கம் அதிக அளவில் பணத்தை அச்சிட்டு அதை சரி செய்யலாமா. வீட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் மாதம் மாதம் 15 ஆயிரம் ,20 ஆயிரம், 30 ஆயிரம் பணம் கொடுத்து அனைவரையும் பணக்காரர்களாக ஆக்கிவிட்டால் இந்த பூமியில் யாரும் பிரச்சனை இல்லாமல் இருக்கும் சூழலை ஆக்கிவிடமுடியுமா இதைத்தான் பணவீக்கம் என்று சொல்கிறோம்.
இந்த பணவீக்கத்தை தெரிந்து கொள்வதற்க்கு முன்பாக சில விதமான முக்கிய உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நம்மிடம் இருக்கும் பணத்திற்கு முக்கியத்துவம் இருக்கா இல்லையான்னு தெரிந்து கொள்ளவேண்டும்.
முதலில் நாம் எப்படி இருந்தோம் என்றால் பண்டமாற்று முறையில் இருந்தோம் ஒரு பொருளை கொடுத்து வேறொரு பொருளை வாங்கிக்கொள்ளலாம் , அந்த முறையில் சில பிரச்சினைகள் இருந்தது என்னவென்றால் உப்பை கொடுத்து தங்கத்தை வாங்கமுடியாது. இதுக்கு எதாவது வழி கண்டுபிடிக்கணும் என்று நினைத்துதான் தங்கத்தை அளவீடாக வைக்கிறார்கள். இந்த தங்கத்தை அளவீடாக வைக்கும் போது நிறைய பேர் உழைத்து தங்கத்தை வைத்திருந்தார்கள். இப்போ தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியாது அதற்கு ஒரு சிறிய வங்கி என கொண்டுவரப்பட்டது. அந்த இடத்தில் நாம தங்கத்தை கொண்டு போய் கொடுத்தால் ஒரு ஸ்லிப் தருவார்கள் இப்போ அந்த இஸ்லிப்பில் இருக்கும் மதிப்பிற்கு ஏற்ப பணம் கொடுக்கப்பட்டது. இந்த முறையிலும் பல பிரச்சனைகள் வந்ததால் இதை முழுவதுமாக அழித்து வேறொரு பரிணாமம் தொடங்கப்பட்டது. டாலர் என்ற முறை வந்தது.
நாம இப்போ பயன்படுத்துற காகித பணத்திற்க்கு மதிப்பு இருக்கா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. இதற்க்கு நாமளே ஒரு மதிப்பை உருவாக்கியுள்ளோம்.நாம தானே பணத்துக்கு மதிப்பு உருவாக்கியுள்ளோனு அதிக அளவில் பணத்தை அச்சிட்டு அதை மக்களுக்கு கொடுத்தால் விளைபொருட்களை அதிக பணம் உள்ளவர்கள் வாங்கி அதை அதிகவிலைக்கு விற்றால் அதனால் பணம் இல்லாத ஏழை மக்கள் அந்த பொருளை வாங்க முடியாத நிலை ஏற்படும் உள்நாட்டு பிரச்சினைகள் என அதிக பிரச்சினைகள் ஏற்படும் எனவே இதை தான் பணவீக்கம் என்று சொல்வார்கள்.
பணவீக்கம் என்று சொல்லும் போது இந்த டாலரிலும் இதே மாதிரியான பணவீக்கம் இருக்கு. fed என்ற அமைப்பு தேவைக்கு அதிகமான பணத்தை அச்சிட்டு அதை எல்லா நாடுகளுக்கும் விநியோகம் செய்துவிட்டார்கள். இதனால் அதிகமா கடன் வாங்கியுள்ளது அமெரிக்கா. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் எப்படி பண்டமாற்று முறையை ஒழித்து தங்கபரிமாற்றத்தை கொண்டுவந்தோமோ,பின் தங்கபரிமாற்றத்தையும் ஒழித்து பியட் மணிக்கு மாறினோமோ இப்போ பியட் மணி முறையை ஒழித்து வேறொருமுறைக்கு மாற வேண்டும் அப்படி செய்தால் மட்டும் தான் அவர்களால் இந்த உலகை கட்டுப்படுத்த முடியும். அதற்காக புதிதாக கொண்டுவரும் ஒரு முறை தான் டிஜிட்டல் டாலர் என்ற முறை.

இந்த டிஜிட்டல் டாலர் என்ற முறையை யார் செய்ய போகிறார்கள் என்று கேட்டால் இதற்காக ஒரு அமைப்பையே ஏற்படுத்தி இருக்கிறது அமெரிக்கா அரசாங்கம். மூன்று வாரத்திற்கு முன்புதான் இந்த அமைப்பிற்கு 22 நபர்களை நியமித்திருக்கிறார்கள்.
.டிஜிட்டல் கரன்சி என்பது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்றால் ரிசெர்வ் பேங்க் , அல்லது இந்த உலகத்தை பணம் வழியாக கட்டுப்படுத்தனும் என்று நினைக்கும் ஒரு அமைப்பு இருக்கும் இல்லையா அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது தான் இந்த டிஜிட்டல் டாலர் .டிஜிட்டல் கரன்சி என்பது நம் கணக்கில் , அல்லது கூகுள் பேயில் எவ்வளவு பணம் இருக்கோ அதைத்தான் டிஜிட்டல் கரன்சி என்று கூறுவார்கள்.
இப்போ கொரியா டிஜிட்டல் கரன்சிக்கு மாற போகிறார்கள், சீனாவும் மாற போகுது, பிரான்ஸ் டிஜிட்டல் யூரோவை மாத்தப்போகுது , இந்தியாவும் டிஜிட்டல் ரூபாய்க்கு மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கு , அமெரிக்காவும் சொல்கிறார்கள் டிஜிட்டல் டாலருக்கு மாறப்போகிறோம் என்று ஏன் எல்லாரும் போட்டிபோடுகிறார்கள் என்ற கேள்விக்கு யார் ஒற்றை கணக்காக எல்லாரும் பயன்படுத்தும் ஒரு ஒற்றை account holder-ஆக மாறுவார்கள் என்ற போட்டி தான். இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் இந்த உலகை ஆள போகிறார்கள். அது சவுத் கொரியாவாக இருக்கலாம், சீனாவாக இருக்கலாம், அமெரிக்காவாக இருக்கலாம் ஏன் இதை சரியான விதத்தில் செய்தால் அது இந்தியாவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
டிஜிட்டல் டாலர் என்று சொல்லும் போது அவர்கள்ஒரு account-ஐ உருவாக்குவார்கள், அதில் இரண்டு விதமான transfer-க்கு சரி சொல்லுவார்கள்.அதில் ஒன்று holsale, மற்றொன்று டோக்கன் பேஸ் என்று சொல்லுவார்கள். ஹோல்சேல் என்று சொல்லும்போது அமெரிக்காவில் பெடரேல் பாங்கிலிருந்து நம்ம ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியாவிற்கு கொஞ்சம் பணத்தை டாலராய் அனுப்புவார்கள், டோக்கன் பேஸ் முறையில் ஒரு தனி மனிதர்
நேரடியாக பெடரேல் பாங்கில் ஒரு கணக்கை துவங்க முடியும், எந்த ஒரு முன்பணமும் இல்லாமலும் ஒரு கணக்கை துவங்கலாம் எப்படி நமக்கு சமூக கணக்கு உள்ளதோ அதே மாதிரியான ஒரு வங்கி கணக்கை துவங்கலாம் அதன் மூலம் நாம் அந்த பெடரல் வங்கியிலிருந்து பணத்தை கடனாகவும் வாங்கலாம் போடவும் செய்யலாம்.
இப்போ எங்கிட்ட 10 டாலர் இருந்தால் அதைவைத்து நான் அமெரிக்காவிலும் வாங்கமுடியும், இந்தியாவிலும் வாங்கமுடியும் ஏனென்றால் அது உலக அளவில் அது ஒற்றை பணமாக மாற்றப்படும். இந்த ஒரு அமைப்பு முறையை யார் சரியாக செய்யபோகிறார்கள் என்பதில் தான் அனைத்து நாடுகளும் இறங்கியிருக்கிறார்கள். இதை சீனா சரியாக செய்தால் சீனா இந்த உலகை ஆளும், அமெரிக்கா சரியாக செய்தால் அமெரிக்கா ஆளும்
இந்த ஓட்டத்தில் தான் அனைத்து நாடுகளும் உள்ளன.
இவ்வாறு செய்வதின் மூலம் அனைத்து கடன்களும் தள்ளுபடி ஆகிவிடுமான்ற கேள்விக்கு பதில் ஒரு யுகம் மாறுகிறது என்பதுதான் அதாவது தங்கத்திலிருந்து எப்படி பியட் காரென்சிக்கு மாறினோமோ அப்போதே தங்கம் அது சம்பந்தமான அனைத்துவிதமான ஆவணங்களும் அழித்து விட்டது. இப்போ பியட் கரென்சியூலிருந்து டிஜிட்டல் காரென்சிக்கு மாறும் போது இங்கிருக்கும் மனிதர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள் எனவே அவர்களது கணக்கு புதிதாக தொடங்கப்படுகிறது.அப்படிவிதமான சில செயல்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு எல்லோருக்கும் டிஜிட்டல் டாலர் என்பது கொடுக்கப்படும்.

இது எப்படி சாத்தியம் என்று கேட்டால் தற்போது உலகமெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மேலும் இரண்டு, அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ந்தால் இந்த உலகம் இதுவரை பார்க்காத அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் எல்லாரும் அதற்க்கு பயந்துட்டு தான் இருக்கிறார்கள். அப்படி ஒரு பொருளாதார வீழ்ச்சியுல் இந்த உலகம் விழும் போது யாரிடமும் பணம் இருக்காது அந்த நேரத்தில் சொல்லுவார்கள் உங்களுக்கு உதவுவதற்காக என்று சொல்லி இந்த டிஜிட்டல் டாலர், அல்லது டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் படுத்துவார்கள். இவ்வாறு அறிமுகம் படுத்தப்படும் இந்த கணக்கில் தான் நம் மாத சம்பளமும் டிஜிட்டல் கரென்சியாக வந்து விழும். இவ்வாறு எல்லாவிதமான பணபரிமாற்றமும் இதன் மூலமாகத்தான் நடைபெற்றாக வேண்டும் என்ற சூழல் ஏற்படும்.
இதன்முலமாகத்தான் எல்லா மனிதர்களும் ஒற்றை நபரின் கண்காணிப்பில் வந்துவிடுவோம் இதைத்தான் டிஜிட்டல் டாலர் என்று சொல்கிறார்கள். இத்தகைய ஒரு செயலின் மூலம் உலகத்தில் எந்த அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்ன நடக்கும் என்பதை வரும் சில வருடங்களில் தெரியவரும்.















