RETamil News
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை!

சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதால் இரத்தம் செலுத்தப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய குறைவால் எச்.ஐ.வி பதித்த இரத்தம் செலுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தால் சிவகாசி அரசு மருத்துவமனையின் இரத்த வாங்கி ஒப்பந்த தொழில்நுட்பவியலாளர் வளர்மதி மீது நடநடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மேற்சிகிச்சைக்காகவும் , இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்துள்ளதாக மனோகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அந்த அரசு மருத்துமனையிலேயே ஓட்டுநர் பணி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.















