RETamil Newsதமிழ்நாடு
என்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் தற்கொலை முயற்சி 6 பேர் கவலைக்கிடம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில், 1ஏ சுரங்கத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 41 நாட்கள் முழுவேலை வழங்கக்கோரியும், பணியிட மாற்றம் வழங்காமல் ஒரே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கடந்த சில நாட்களாகப் போராடி வந்தனர்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 25 தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விஷமருந்திய 6 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் என் எல் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.