fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

பிரபல பாலிவுட் நடிகை பற்றி பரபரப்பான வதந்தி…! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Rumours about actress hemamalini

மும்பை:

என்னை பற்றிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என பாலிவுட் நடிகை ஹேமமாலினி இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை ஹேமமாலினி (71) முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரவியது. ஏற்கனவே அமிதாப் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆகையால் ஹேமமாலினி குறித்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இது குறித்து ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், எனது தாயார் நலமுடன் உள்ளார். வீண் வதந்தியை நம்ப வேண்டாம் என டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளார்.

இந்நிலையில் ஹேமமாலினி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனக்கு ஒரு குறையுமில்லை. கிருஷ்ண பகவான் ஆசியுடன் நலமுடன் உள்ளேன். கொரோனா பாதிப்பால் நீங்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள் என்று அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close