RETamil Newsஉலகம்

அமெரிக்காவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பாக உயர்ந்த உயிரிழப்புகள் – 45 ஆயிரம் பேர் பலி

சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகையே இன்று ஆட்டி படைக்கிறது. பல நாடுகளும் இந்த தொற்று வைரஸின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

முதல்முதலில் சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் , அந்நகரில் பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.

ஆனால் வல்லரசு நாடு என அறியப்படும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் உயிரிழப்பு 45 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இந்த பலிஎண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரட்டிப்ப்பாக அதிகரித்துள்ளது. இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 82-ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிட்சை முடிந்து சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை அமெரிக்காவின் 12 நகரங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயுரத்தை கடந்து உள்ளது, மேலும் 5 நகரங்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்படைந்தோர் எண்ணிக்கையை கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close