அமைச்சர் ஆர்.காந்தி–மேல்விஷாரம் ஹன்சா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை திறந்து வைத்தார்.
ஆற்காடு, ஜூன் 12, ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஹன்சா நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட்சாலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட ஹன்சா நகர் பகுதயில் அமைச்சர் ஆர்.காந்தி தனது சொந்த பணத்தில் சிமெண்ட்சாலை, மழைநீர் வடிகால்வாய், மற்றும் குடிநீர் குழாய்உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் செய்து கொடுத்துள்ளார். இந்த பணிகள் திறப்பு விழா ஹன்சா நகர் பகுதியில் நடைபெற்றது.விழாவிற்கு நகர திமுக செயலாளர் கே.எம்,ஹிமாயூன் தலைமைவகித்தார். தொழிலதிபர் சவுக்கார்முன்னா, நகர மன்ற தலைவர் எஸ்.குல்சார் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜபர் அஹமது வரவேற்றார். கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளிதலைவர் கமலாகாந்தி ஆகியோர் சிமெண்ட்சாலை,உள்ளிட்ட வளர்ச்சி திட்டபணிகளை பொதுமக்களுக்கு திறந்து வைத்து பேசினார்கள். இந்த விழாவில் முன்னாள் எம்.பி.தி.அ.முஹமதுசகி,மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.பஞ்சாட்சரம்,மேல்விஷாரம் நேஷ்னல் வெல்பர் சங்க தலைவர் முஹமது அயூப், பொறுப்பாளர் கே..நிஷாத் அஹமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் மற்றும் நகர திமுக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.