RETamil Newsஅரசியல்இந்தியா
செங்கல்பட்டு – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து :ரயில்வே நிர்வாகம் தகவல்.
சென்னை செங்கல்பட்டு – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடுவாஞ்சேரி – வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில் இன்று காலை 8.25 முதல் மாலை 6.40 மணி வரை இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் பயணிகள், தங்களது பணிகளை அதற்கேற்றவேறு அமைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.