RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
தலைமை செயலகத்தில் தடையை மீறி மறியல்: குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு ஸ்டாலின் கைது

தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கலந்தாலோசிக்க முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தலைமைச்செயலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த பகுதியில் ஸ்டாலின் உள்ளிட்டோர் மாறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை தலைமை செயலகம் அருகே மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவருடன் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் கைதுக்கு திமுக தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.