fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

எம்எல்ஏ அன்பழகன் உடல்நலம்…! நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..!

Stalin visits rela hospital

சென்னை:

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் விசாரித்தார்.

திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளரும், திருவல்லிக்கேணித் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கடந்த 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமதனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலனில் சிறிது, சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் குறைக்கப்பட்டு, அவராகவே 60 சதவீதம் சுவாசிப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ரேலா மருத்துவனை இயக்குநரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விசாரித்து தெரிந்து கொண்டார். அரசு தரப்பில் எந்தவித உதவியும் செய்யத் தயாராக இருப்பதாக மருத்துவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  இந் நிலையில் இன்று காலை 11 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அன்பழகன் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close