அவங்களுக்கு நேரடியாகவே பணத்தை கொடுங்க…! மாத்தி யோசித்த ராகுல்…!
Congress Rahul Gandhi advice to central government

டெல்லி: கொரோனா நிவாரணத் தொகுப்பை மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இணையதளம் வாயிலாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நெருக்கடியில் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டிய நேரம் இது. நெருக்கடியான இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பணம் தேவை.
எனவே, பிரதமர் மோடி அறிவித்துள்ள நிவாரணத் தொகுப்பை மறு பரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும். நேரடி வங்கி பரிமாற்றம், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
அதே போல, விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்குவது ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் இந்த மக்கள் தான் நமது எதிர்காலம் என்று கூறினார்.















