fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தொண்டர்களே..! கருணாநிதி பிறந்த நாள் பற்றி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

Stalin instruction about karunaniti birthday tomorrow

சென்னை:

கருணாநிதியின் பிறந்த தினத்தை ஆடம்பரம் இன்றி கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த தினம் நாளை  கொண்டாடப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகளில் திமுக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:

கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் கருணாநிதியின் பிறந்த தினத்தை எவ்வித ஆடம்பரம் இன்றி கொண்டாட வேண்டும். சென்னையில் கொரோனா தொற்று உச்ச கட்டமாக உள்ளது.

ஆகவே கொண்டாட்டங்கள் பாதுகாப்பாகவும், குறைவானதாகவும் இருக்க வேண்டும்.  நான் அஞ்சலி செலுத்த போகும் போது யாரும் கூட்டம் கூடாமல் அவரவர் இருந்த இடத்திலேயே பிறந்த நாளை கொண்டாட வேண்டும். தனி மனித விலகல் அவசியம் என்று கூறி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close