fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்…! வீட்டில் தவறிவிழுந்து மரணம்

Srilankan minister Arumugan thondaiman expired

கொழும்பு:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்தார்.

வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 55 வயதான அவர் இலங்கை பெருந்தோட்ட துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

1964ம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ராயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். ஆறுமுகன் தொண்டமான், 1990ம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைந்தார்.

1993ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றிய அவர், 1994ம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

1994ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். பல அமைச்சக பதவிகளை வகித்த அவர், தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close