RETamil Newsஇந்தியா
வாட்ஸ்அப்-ஐ வேவு பார்க்கும் யோசனை வாபஸ்! சுப்ரீம்கோர்ட் மத்திய அரசுக்கு உத்தவரவு !
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து வாட்ஸ்அப்-ஐ வேவு பார்க்கும் மத்திய அரசின் யோசனை கைவிடப்பட்டது.
சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் , டிவிட்டர் ஆகியவற்றை கண்காணிக்க மத்திய அரசு மையம் ஒன்றை அமைப்பதாக அறிவித்தது.
ஆனால் அதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அதில் இவ்வாறு வாட்ஸ்அப், பேஸ்புக்கை கண்காணிக்கும் மையத்தினை ஆரம்பித்தால் நம் இந்திய அரசாங்கம் கண்காணிக்கும் அரசாங்கமாக மாறிவிடும். இது பொது மக்களை கண்காணிக்கும் அரசாங்கத்தினை உருவாக்குவது போன்றது.
அதனால்தான் உச்ச நீதிமன்றம் இப்படியோர் முடிவை எடுத்துள்ளது என்று கருதப்படுகிறது.