fbpx
RETamil Newsஅரசியல்உலகம்

ரஷ்ய பிரதமர்க்கு கொரோனா தொற்று உறுதி

Corona infection confirmed to Russian PM

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தன்னை தனிமை படுத்தி கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

துணைப் பிரதமர் ஆண்ட்ரி பெலோசோவ் தற்காலிகமாக பிரதமர் மிஷுஸ்டினின் கடமைகளைச் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 54 வயதான பிரதமர் மிஷுஸ்டின் ஜனவரி மாதம் தான் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து உணவகங்களையும் ஒரு வாரம் மூடுமாறு ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரஷ்யாவில் இதுவரை இரண்டு பேர் இறந்துள்ளனர் என்றும், 840 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Related Articles

Back to top button
Close
Close