உலகம்
சீனாவுக்கு எதிராக வடகொரியா செயல்படாது: கிம் ஜாங் உறுதி!!
பீஜிங் : வடகொரியாவின் முக்கிய கூட்டாளி சீனா தான் என்றும், அந்நாட்டுக்கு எதிராக வடகொரியா செயல்படாது எனவும் உறுதி பட கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்புக்கு பின் நாடு திரும்பிய கிம் ஜாங் உன், சீனாவிற்கு இரு நாட்கள் பயணமாக சென்றார்.
அங்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங் உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.
பயணத்தை முடித்து நேற்று வடகொரியா புறப்பட்டார். இந்நிலையில், சீனா தான் தங்களின் முக்கிய கூட்டாளி என்றும் சீனாவின் நலனுக்கு எதிராக வடகொரியா செயல்படாது எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் இதை சீன அதிபரிடம் தெளிவுபடுத்தி விட்டதாகவும், கூறியுள்ளார்.