ரொனால்டோவை முந்தினார் மெஸ்சி ; ஒரு நிமிட சம்பளம் 20.31 லட்சம் மட்டும்!!

புதுடில்லி: அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர்களின் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி மெஸ்சி, முதலிடம் பிடித்தார்.

பிரான்ஸ் பத்திரிகை ஒன்று , அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களின் பட்டியலை வெளிட்டது. இதில் அர்ஜென்டினா, பார்சிலோனா (கிளப்) அணிக்காக விளையாடும் மெஸ்சி, முதலிடத்தை பிடித்து  உள்ளார்.

2017-18ம் ஆண்டில் இவரது சம்பளம் ரூ. 1023.64 கோடியாக உள்ளது. அதாவது, நிமிடத்துக்கு ரூ. 20.31 லட்சம் சம்பளமாக பெறுகிறார். இதில், சம்பளம், வர்த்தக ஒப்பந்தங்கள், போனஸ் என, அனைத்தும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

போர்ச்சுகல், ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அடுத்த இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு ரொனால்டோ ரூ. 710.86 கோடி, மெஸ்சியை ரூ. 621.49 கோடியுடன்  பின்னுக்கு தள்ளி , முதலிடத்தில் இருந்தார்.

இம்முறை, ரூ. 763.66 கோடி பெற்று, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த வரிசையில், பிரான்சின் நட்சத்திர வீரர் நெய்மர்  ரூ. 662.11 கோடியுடன்  மூன்றாவது இடத்தில் உள்ளார்.

வேல்சின் கரேத் பேல் ரூ. 357.46 கோடியுடன் நான்காவது இடத்திலும்,

ஸ்பெயினின் ஜெரார்டு பிக்கே ரூ. 236 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.