fbpx
RETamil Newsவிளையாட்டு

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி!

Dhoni keeps busy with organic farming

நேற்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தனது 39 ஆவது பிறந்தநாளை குடுப்பதினாருடன் சிறப்பாககவும் மிகவும் எளிமையாகவும் கொண்டாடினார்.

ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் திரும்பிய இடமெல்லாம் அவரது புகைப்படைகளை பகிர்ந்து கொண்டாடினர்.

தோனி கிரிக்கட் மட்டுமன்றி இதர சிலவற்றிலும் ஆர்வம் காட்டி வருக்கின்றார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று இயற்க்கை விவசாயம் ஆகும்.

இந்த விடுமுறையில் விளம்பரம் எதிலும் நடிக்க அவர் ஆர்வம் கட்டவில்லையாம், எனவே இந்த விடுமுறையில் தனது பண்ணை வீட்டில் இயற்க்கை விவசாயம் செய்துக்கொண்டு வருகின்றார்.

தனது 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்க்கை முறைப்படி பப்பாளி, வாழை உள்ளிட்ட பயிர்களை வளர்த்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது போன்று பயிரிடப்பட்ட செடிகளுக்கு இயற்க்கை முறையிலான உரங்கள் மற்றுமே பயன்படுத்தி வருகின்றாராம்.

தனது தோட்டத்தில் அவர் பயன்படுத்தும் உரத்தினால் விளையும் மகசூலையும் நன்மைகளையும் பொறுத்து, அதனை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உர விற்பனையை தோனி தனது தரப்பில் தொடங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அவர் ஓய்வு பெருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close