உலக கோப்பை கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்
World Cup football: advanced to final for France
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் பைனலுக்கு மூன்றாவது முறையாக முன்னேறியது.
ரஷ்யாவில் 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் முதல் அரையிறுதியில் தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, 7வது இடத்திலுள்ள பிரான்சை சந்தித்தது.
இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இரண்டாவது பாதியில், 51வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் சாமுவேல் உம்டிடி, கார்னர் ஷாட்டை அபாரமாக தலையால் முட்டி கோல் அடித்தார்.
இதுவே அந்த அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதி வரை பெல்ஜியத்தின் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்சின் பின்கள வீரர்களும், கோல் கீப்பரும் அபாரமாக தடுப்பாட்டமாடினர்.
முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி பைனலுக்கு முன்னேறியது.
உலக கோப்பை தொடரில் 3வது முறையாக பிரான்ஸ் பைனலுக்கு நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.