ரோஹித் சர்மா அபார சதம்: வெற்றியுடன் துவங்கியது இந்தியா
Rohit Sharma per match: India started with victory
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று துவங்கியது.
இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 268 ரன்கள் அடித்தது. குல்தீப் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
இந்த நிலையில் 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் 40.1 ஓவர்களில் இரண்டே விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 269 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 137 ரன்களும், விராத் கோஹ்லி 75 ரன்களும் குவித்தனர்.
தவான் 40 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜூலை 14ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது.
கடைசி வரை ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.