டெஸ்ட் போட்டிகளில் நம்பர்.1 ஆனார் வீராட் கோலி ! அசத்த வைக்கும் சாதனைகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆனதை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் நம் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி. இதன் மூலம் இவர் டெஸ்ட் போட்டியில் முதலிடம் பெரும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் முடிந்த நிலையில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
எனினும் இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும் , இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்து அதிரடியாக ஆடினார். இதன்மூலம் 31 புள்ளிகள் எடுத்து , ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த அவர் முதல் இடத்தினை அடைந்தார். கடந்த 32 மாதமாக முதல் இடத்தில் இருந்த ஆஸி.கேப்டன் இஸ்மித் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
இதுவரை அவர் 67 டெஸ்ட் ஆட்டத்தை ஆடியுள்ளநிலையில் இப்போது தான் முதல் முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்த்தினை பெற்றுள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்த இந்திய வீரர்கள் ;
சுனில் கவாஸ்கர்
திலீப் வெங்சர்க்கார்
சச்சின் டெண்டுல்கர்
ராகுல் டிராவிட்
சேவாக்
கெளதம் கம்பிர்
கோலி
சிறந்த பேட்டிங் ரேட்டிங் – இந்திய வீரர்
டெஸ்ட் – வீராட் கோலி – 934 (2018)
ஒருநாள் – வீராட் கோலி – 911 (2018)
டி20 – வீராட் கோலி – 897 (2014)