fbpx
RETamil Newsவிளையாட்டு

காட்பாடியில் நடந்தது கராத்தே போட்டி – 6 மாநில வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு !!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இந்த கராத்தே போட்டியில் தமிழ் நாடு , ஆந்திரா, கர்நாடக தெலுங்கானா, கேரளா, பணிடிச்சேரி என 6 மாநிலத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி 4 தனி தனி பிரிவுகளாக நடத்தப்பட்டது.அவை முறையே ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறுமிகள் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 1500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு , தங்களின் திறமைகளை போட்டிகளின் மூலமாக வெளிப்படுத்தினார்கள்.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு கராத்தே நிபுணர் ரமேஷ் பரிசுகளையும், கோப்பைகளை,சான்றுகளையும் வழங்கினார். மேலும் இந்த போட்டிகளில் வெற்றிபெற்று முதலிடம் பெரும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பிப்ரவரி மாதம் டில்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கராத்தே சாம்பியன் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியை நேரில் காண ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close