fbpx
Tamil Newsவிளையாட்டு

பீட்டர்ஸன்கு தகுந்த பதிலடி கொடுத்த விராட் கோலி!!

virat kohli makes fun with kevin petersen

கொரோனா காரணமாக உலகமே ஸ்தம்பித்து இருக்கின்றது. இதனால் மக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பிரபலங்கள் ஒன்றும் விதிவிளக்கல்ல என்பதை உணர்த்தும் விதமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் எல்லாம் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

பிரபலங்கள் உட்பட பலரும் தங்களின் தாடி மற்றும் முடியை திருத்திக்கொள்ள இயலாமல் முடங்கி இருக்கின்றனர். அந்த வரிசையில் விராட் கோலியும் ஒருவர். சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விட்டார் கோலி தாடியுடன் இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இதனை கிண்டல் செய்யும் வகையில்” உங்களின் தாடியை ஷேவ் செய்யுங்கள்” என்பது போன்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் தெரிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “உங்களின் டிக் டாக் வீடியோக்களை விட இது மேலானது” என விராட் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close