fbpx
RETamil Newsவிளையாட்டு

முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வெற்றிபெற்றது இந்தியா – 31 ஆண்டுகளுக்கு பின் நடந்த சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடத்தப்பட்டு டிராவில் முடிவடைந்தது. பின்னர் தொடர்மழை காரணமாக இந்த 5-வது நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இருந்த இந்திய அணி இந்த தொடரை வென்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.இந்த ஆட்டத்தின் முதல் டெஸ்ட்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றிப்பெற்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில் 3-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்தது.

இந்நிலையில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடத்தப்பெற்றது. டாசில் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது , இந்த போட்டியின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிகிலேயர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 300 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. 322 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து விளையாடவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

போதிய அளவு வெளிச்சம் இல்லாததாலும் தொடர் மழையின் காரணத்தாலும் 4-வது டெஸ்ட் போட்டி பெருமளவு பாதிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸில் வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை மழை வந்து காப்பரற்றியுள்ளது.இன்று மழையால் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனால் முன்னணியில் இருந்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி போட்டியில் வெற்றிப்பெற்றது.

31 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி கைப்பற்றும் முதல் டெஸ்ட் தொடர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close