உலகம்

திட்டமிட்டபடி சந்திப்பு ; ட்ரம்ப் அறிவிப்பு.

வாஷிங்டன்: திட்டமிட்டப்படி சந்திப்பு உண்டு என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி வட கொரியா அதிபரை ஜூன் 12-ல் சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தெரிவித்தார். வடகொரியா அதிபர் கிம் ஜோங்க் உன், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆகியோர் ஜூன் 12-ல் சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இதனை கடந்த மாதம் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் சிங்கப்பூரில் நடந்து வந்தது. பின்னர் இருவரும் சந்தித்து பேசும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வட கொரிய அரசு பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை அடுத்து  அதிபர் டெனால்டு டிரம்ப் திட்டமிட்டபடி ஜூன் 12-ல் வட கொரியா அதிபர் கிம் ஜோங், உன்னை, சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் இருவரும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close