fbpx
Others

கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது !

ஆவடி காவல் ஆணைரயகத்தில் 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 603.775 கிலோ கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது!  ரெட்ஹில்ஸ் நவ. 10  ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாமற்றும் போதை பொருட்களை அழிக்க, ஆவடி மாநகர காவல் ஆணையாளர் கி.சங்கர் உத்தரவின்படிகூடுதல்ஆணையாளர்கே.பவானீஸ்வரி,தலைமையில்ஆவடிகாவல்மாவட்டகாவல்துணைஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மற்றும் தடய அறிவியல் துணை இயக்குனர் ஷோபியா ஜோசப் ஆகியோர்கள் கொண்ட போதைபொருள்அழிப்பதற்கானகுழுஅமைக்கப்பட்டுசெயல்பட்டுவருகின்றது.போதைபொருட்களை அழிக்க அரசு அனுமதிபெற்ற செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள G.J. Multiclave India Pvt. Limited என்ற நிறுவனத்தில் உள்ள Insulator-மூலமாக ஆவடி காவல் ஆணையாளர் அலுவலக எல்லையில் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்றத்தில் அழிப்பதற்கான ஆணை பெறப்பட்ட 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 600 கிலோ கஞ்சா, 3 கிலோ கஞ்சா சாக்லேட், 19000 போதை மாத்திரைகள், 238 மெத்தபெட்டமைன் (மொத்தம் சுமார் 603.775 கிலோ) என மொத்தம் ரூ.60,37,750 மதிப்புடையதடைசெய்யப்பட்டபோதைப்பொருட்கள்எரிக்கப்பட்டுஅழிக்கப்பட்டது.  மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையாளர். பொன்சங்கர், காவல் ஆய்வாளர் சுபாஷினி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

 

Related Articles

Back to top button
Close
Close