fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்தி வைப்பு…! இஸ்ரோ அறிவிப்பு!

ISRO sivan announces Gaganyan project

பெங்களூரு:

கொரோனா காரணமாக ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி 2018ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். ககன்யான் திட்டத்துக்காக இந்திய வீரர்கள் 4 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் கொரோனா காரணமாக  விண்கலத்தை  அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறி இருப்பதாவது:

கொரோனா காரணமாகவும், நிதிப் பிரச்சினை காரணமாகவும் ககன்யான் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த திட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படுத்தப்பட இருந்த சந்திரயான் 3 திட்டமும் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close