REவிளையாட்டு
இந்திய அணி அபார பந்துவீச்சு-50 ரன்களுக்கே ஐந்து விக்கெட் போச்சு !!

பெங்களூரு: பெங்களூரு டெஸ்டில் இந்திய அணியின் அசத்தல் பவுலிங்கில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அணி, ‘டாப் ஆர்டர்’ விக்கெட்டுகளை இழந்து வருகிறது .
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் பெங்களூருவில் துவங்கியது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கும் முதல் போட்டி இது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. பாண்ட்யா (10), அஷ்வின் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ‘டாப் ஆர்டர்’ வீரர்களை வரிசையாக இழந்து வருகிறது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.