fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியாஉலகம்

184 வாக்குகளில் வெற்றி…! ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் இந்தியா!

India in UN council members

டெல்லி:

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாகி உள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றன.

10 நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றன.

2020 – 21ம் ஆண்டுக்கான நிரந்தரமில்லாத உறுப்பினர் தேர்தலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா போட்டியிட்டது.

நியூயார்க்கில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், பதிவான 192 வாக்குகளில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

2021-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தியா இப்பொறுப்பில் நீடிக்கும்.

இதன் மூலம், ஐ.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லாத உறுப்பினராக 8 வது முறையாக இந்தியா தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close