fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கேபிபி சாமி, காத்தவராயன், ஜெ. அன்பழகன் மரணங்கள்…! சட்டசபையில் திமுகவின் எண்ணிக்கை எவ்வளவு?

In tamilnadu assembly dmk strength down

சென்னை:

திமுகவில் இந்த ஆண்டில் 3 எம்எல்ஏக்கள் மரணம் அடைந்ததால் அக்கட்சியின் எண்ணிக்கை 97 ஆக குறைந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் தொகுதியை சேர்ந்தவர் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன். கொரோனா காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசம் அடைந்ததால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62.

ஜூன் 10ம் தேதியான இன்று அவருக்கு பிறந்த நாள். அவரின் மரணம் திமுகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அன்பழகனின் மறைவால் சட்டசபை தொகுதிகளின் காலியிடம் 3 ஆக அதிகரித்துள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன் (குடியாத்தம்) , கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) காலமாகினர். இப்போது ஜெ அன்பழகன் என மொத்தம் 3 பேர் இந்த ஆண்டில் மரணமடைந்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close