RETamil Newsஅரசியல்
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!
சென்னை: தென்மேற்கு திசையில் இருந்து 50 கி.மீ, வேகம் வரை வட கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியில் காற்று வீச கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கடலோர பகுதிகளில் 60 கி.மீ., வரை காற்று வீச வாய்ப்புள்ளது. தென் கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 3.5-4.3 மீ வரை எழும்பவும் வாய்ப்புள்ளது.
எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 7 செ.மீ, ஜி.பஜாரில் 3 செ.மீ, நடுவட்டத்தில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.