fbpx
Others

முல்லைப்பெரியார் அணை தண்ணீர் திறப்பு – தேனி – கம்பம்

முல்லைப்பெரியார் அணையில் இருந்து பாசனத்திற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தண்ணீரை திறந்து வைத்தார் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி…

ஜூன் : 01 தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக நெல் சாகுபடிக்கு பாசனத்திற்காக தமிழ அரசு சார்பில் முல்லைப் பெரியார் அணையில் இருந்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார் அதன் படி அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை திறந்துவிடப்பட்டுள்னை இந்த தண்ணீர் திறப்பால் கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

இந்த தண்ணீர் திறப்பு 01-06-2022 முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு திறந்துவிடப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரை நீர்வளத் துறை பெரியாறு வைகை வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் எம் குமார், மதுரை நீர்வளத் துறை பெரியாறு வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் ந, அன்புச்செல்வம் உத்தமபாளையம் உதவி கோட்டப் பொறியாளர் கணேசமூர்த்தி மற்றும் உதவி பொறியாளர்கள் விவசாய சங்க நிர்வாகிகள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்த தண்ணீரை கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத் தூள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close