RETamil Newsஅரசியல்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்!!
டெல்லி : நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கக்கோரி கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.
கமலின் மனுவை ஏற்று மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப் 21ம் தேதி மதுரையில் நடந்த மாநாட்டில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் அறிவித்து இருந்தார்.