RETamil News
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை:
அரபிக்கடல் பகுதிகளில் காற்று வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.