fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்

அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…! மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

DMK mla anbazhagan gaining

சென்னை:

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உறுதி செய்யபட்டது.

இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் அவருக்கு வெண்ட்டிலேட்டர் மூலமாக 80 சதவீத ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது.

பின்னர் அது கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்பட்டு 40 சதவீதமாக்கப்பட்டுள்ளது. 60 சதவீதம் அவராகவே சுவாசிப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். அவருக்கு கொடுக்கப்படும் மயக்க மருந்தின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close